நிகழாண்டு கல்பனா சாவ்லா விருதுபெற தகுதிவாய்ந்த பெண்கள் நாளைக்குள்(ஜூன் 25) விண்ணப்பிக்கலாம் என பெரம் பலூர் ஆட்சியர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித் துள்ளது: வீரம், துணிவு மற்றும் தைரியமாக செயல் பட்டு ஆபத்தில் இருந்தவர்களின் உயிரைக் காத்த நடவடிக்கைக்காக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் களுக்கு ஆண்டுதோறும் ஆக.15 சுதந்திர தினத்தன்று தமிழக அரசின் சார்பில் கல்பனா சாவ்லா விருது முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.
நிகழாண்டு இவ்விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், எம்ஜிஆர் விளையாட்டரங்கம், ஆட்சியர் வளாகம் பின்புறம், பெரம்பலூர் என்ற முகவரியில் ஜூன் 25-ம் தேதி(நாளை) மாலை 5 மணிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago