பருவமழை ஏமாற்றம் மற்றும் கடும் வெயில் - தென்காசி அணைகளுக்கு நீர்வரத்து குறைவு :

By செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வரும் நிலையில், வெயில் கடுமையாக உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கியது.

ஆனால், கடந்த 5 நாட்களாக மழையின்றி வறண்ட வானிலை காணப்படுகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இருப்பினும் இரவில் குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து மழை ஏமாற்றம் அளித்து வருவதால் குற்றாலம் அருவிகளிலும் நீர் வரத்து குறைந்தது. அருவிகளில் குளிக்க தடை தொடர்வதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. குண்டாறு அணை மட்டும் முழு கொள்ளளவில் உள்ளது. பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் மற்ற அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 76.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 115.25 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்