அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கேட்ட ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரியலூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூபதி கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் விவசாயத்தை காப்பாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி’’ என்றார்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘இந்த அறிவிப்பு மகிழ்ச் சியை அளிக்கிறது. அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து, அரசிதழில் வெளியிட வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago