கரூர் அமராவதி ஆறு, சாயப்பட்டறைகளில் - மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கரூர் அமராவதி ஆறு மற்றும் அதையொட்டியுள்ள சாயப்பட் டறைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பதாக புகார் கள் வந்ததால், அந்த ஆற்றை யொட்டிய சாயப்பட்டறைகளில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சேலம் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன் தலைமையில் கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்(பொ) கோபாலகிருஷ்ணன், பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் அடங் கிய குழுவினர் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலை பசுபதி லேஅவுட் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றில் சாயக் கழிவு கலக்கிறதா என நேற்று ஆய்வு நடத்தினர். மேலும், ஆற்றில் இருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, அங்குள்ள சாயப்பட்டறைகளில் உள்ள சுத்திகரிப்பு அமைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சேலம் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறி யாளர் மதிவாணன் கூறியது: அமரா வதி ஆற்றில் சாயப்பட்டறைகள் உள்ள இடத்துக்கு முன் மற்றும் பின் பகுதியில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. பின்னர் இதுதொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்