செங்கோட்டையில் இளம்பெண் மீண்டும் போராட்டம் - எஸ்ஐ, ஏட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் :

தந்தை தாக்கப்பட்டதாக கூறி, செங்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம் நடத்திய விவகாரத்தில் எஸ்ஐ, ஏட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அப்பெண் நேற்று மருத்துவமனை மாடியில் ஏறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (49). மாற்றுத் திறனாளியான இவர், ரேஷன் அரிசி கடத்தியதாக புளியரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் கடுமையாக தாக்கியதாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம் மாலை பிரான்சிஸ் மகள் அபிதா (24) செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி, தனது தந்தையை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, போராட்டம் நடத்தினார்.

போலீஸார் மீது அபிதா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பியிடம் கேட்டபோது, “குற்றச்சாட்டுக்கு ஆளான புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர் மஜீத் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி டிஎஸ்பி விசாரணை நடத்துவார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு அபிதாவின் மாமனார் வெட்டப்பட்ட சம்பவத்தில், அபிதா மற்றும் அவரது தந்தை பிரான்சிஸ் மீது சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது” என்றார்.

இந்நிலையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை மாடியில் ஏறி அபிதா நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரி ஜூலியா (27) மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

செங்கோட்டை அரசு மருத்துவமனை மாடியில் ஏறி அபிதா நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரி ஜூலியா (27) மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்