திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க வட்டார அளவில் 19 குழுக்களும், குறுவட்ட அளவில் 54 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க மருத்துவ வட்டார அளவில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலரின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவர் ஆகியோர் அடங்கிய 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்கள், தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள் மற்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை குழுக்கள் கண்காணிக்கும்.
வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை, வட்டார அளவிலான குழு கண்காணிக்கும். மேலும், அக்குழுவினர், உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோரை ஒருங்கிணைத்து தடுப் பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
குறுவட்ட அளவில் வருவாய் ஆய்வாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை யினர் அடங்கிய 54 குழு அமைக்கப் பட்டுள்ளது. வியாபார மையங்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை கண்காணித்து விதிமீறல் களில் ஈடுபடுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்க குறுவட்ட அளவிலான குழுக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago