தென்காசியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்க கோரிக்கை :

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 32 கிளைகள் உள்ளன. இவற்றில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 16 கிளைகள் உள்ளன.

இவை அனைத்தும் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வசூலித்து, மத்திய கூட்டுறவு வங்கிக்கு அதிக வருமானம் தரக்கூடிய வங்கிகளாக உள்ளன.

அதேபோல், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 158 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் 86 வங்கிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ளன.

ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் என 30 கூட்டுறவு சங்கங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ளன. மேலும், தென்காசி மாவட்டத்தில் 5 கூட்டுறவு பண்டகசாலை வங்கிகள், 5 மார்க்கெட்டிங் சொசைட்டி உள்ளன. நெசவாளர் கூட்டுறவு சங்கம், மண்பானை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பனைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் என பல சங்கங்கள் உள்ளன.

தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அலுவலகங்கள் தென்காசியில் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, தென்காசி மாவட்டத்துக்கு கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கும் மத்திய கூட்டுறவு வங்கி தனியாக அமைக்க வேண்டும். மேலும், அதனை நிர்வகிக்க அரசு அலுவலர்களையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்துக்கு கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கும் மத்திய கூட்டுறவு வங்கி தனியாக அமைக்க வேண்டும். அதனை நிர்வகிக்க அரசு அலுவலர்களையும் நியமிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்