வேலூர் கோட்டையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தினத்தை யொட்டி யோகா பயிற்சியுடன் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வேலூர் கோட்டை பூங்காவில் இந்திய தொல்லியல் துறை 7-வது உலக யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சோமசேகரன் நாயர் தொடங்கி வைத்தார். வேலூர் காஸ்மிக் யோகா ஸ்டுடியோ நிறுவனர் அஞ்சு சக்திவேல் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை சர்தயா பவுன்டேஷன் நடன கலைஞர் ஷிஜித் கிருஷ்ணா மற்றும் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை வட்ட தொல்லியலாளர் முனைவர் இரா.ரமேஷ், வேலூர் பொறுப்பாளர் வரதராஜ சுரேஷ், வேலூர் கோட்டை அருங்காட்சியக காப் பாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியன் என்சிசி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் சஞ்சய் சர்மா தலைமை தாங்கினார். லெப்டினென்ட் கர்னல் (நிர்வாகம்) ஏ.கே.சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆன்லைன் வழியாக 2,725 என்சிசி மாணவர்கள் யோகா தின பயிற்சியில் பங்கேற்றனர் என 10-வது பட்டாலியன் என்சிசி அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு யோகா பயிற்சியை இயற்கை மற்றும் யோகா மருத்து வர் சசிரேகா அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago