பெரம்பலூர் அருகே - முறைகேடாக வீட்டுமனை பெற்ற 44 பேரின் பட்டா ரத்து :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே முறைகேடாக வீட்டுமனை பெற்ற 44 நபர்களின் பட்டாவை ரத்து செய்து சார் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் வட்டம் சிறுவயலூர் ஊராட் சிக்குட்பட்ட மங்கூன் கிராமத் தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் வேல்முருகன்.

மங்கூன் மலையடிவாரம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் விரிவாக்கத்துக்காக ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டிருந்த 3 ஏக்கர் நிலத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் சிலருக்கு வருவாய்த் துறையினர் முறைகேடாக பட்டா செய்து கொடுத்ததாக முதல்வரின் தனிப் பிரிவு, தமிழ்நாடு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சிருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து மாவட்ட ஆட்சி யருக்கு அண்மையில் உத்தர விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் சார் ஆட்சியர் பத்மஜா தலைமையிலான வரு வாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 63 நபர் களில், 15 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள், 3 பேர் நக்க சேலம்-செட்டிக்குளம் சாலை விரிவாக்கத்தின்போது வீடு இழந் தவர்கள், ஒருவர் ஆதரவற்ற விதவை என்பது தெரியவந்தது,

இவர்கள் 19 பேரை தவிர, இதர 44 பேர் முறைகேடாக வீட்டுமனைப் பட்டா பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேடாக வீட்டுமனைப் பட்டா பெற்ற 44 பேரின் பட்டாவை ரத்து செய்து, நிலத்தை மீட்க ஆலத்தூர் வட்டாட்சியருக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, அரசு நிலத்தை மீட்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்