கள்ளக்குறிச்சி நகராட்சியில் - திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக் குட்பட்ட 2-வது வார்டு வ.உ.சி நகர் பகுதியில் அடங்கிய குறுக்குத் தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளான வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளான முதல்நிலை சேகரிப்பு பணியை ஆட்சியர் பி.என்.தர் ஆய்வு செய்தார்.

அப்பகுதியின் வீட்டு உரிமையாளர்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து கேட்டறிந்த அவர், மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை கையாள்வது குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது வ.உ.சி. நகர் பகுதியில் பயன்படுத்தப்படாத கிணற்றை ஆய்வு செய்து உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

இப்பகுதிகளில் வடிகால் வசதி மற்றும் தூய்மை பணி களை நாள்தோறும் கண்காணித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கரோனா விழ்ப்புணர்வு பணிகள்மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் நகராட்சி வாகனங்கள் வாயிலாக விளம்பர பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ராஜா நகர் பகுதியில் அமைந் துள்ள நகராட்சி பூங்காவில் நுண் உரம் தயாரிக்கப்படும் பணி குறித்து கேட்டறிந்தார். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் இதர அறிகுறிகள் தொடர்பாக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் கள ஆய்வுப் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு மையப் பகுதியில் சிறு பூங்கா அமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல் சாலையோரம் அழகுப்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். சங்கராபுரம் சாலையில் அமைந்துள்ள கோமுகி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் தடுப்பு சுவர் அமைத்தல், சாலையோர பூங்கா அமைத்தல் மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல் தொடர்பாக ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

கரோனா நோய்த் தொற்று தொடர்பாக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் களப்பணியையும் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்