புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புளிச் சங்காடு கைகாட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஜூன் 14-ம் தேதி மதுபானம் வாங்க, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சங்கர்(33) என்பவர் ஒரு குழந்தையுடன் வந்துள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த எம்.ராஜ கோபால் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனா்ல், ராஜ கோபாலை சங்கர் தரக்குறை வாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சங்கரை நேற்று கைது செய்து சிறையில் அடைத் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago