புதுப்பாளையம் அருகே பட்டிய லினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டது தொடர் பாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று விசாரணை நடத்தினார்.
தி.மலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் கல்லரப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை. பட்டிய லினத்தைச் சேர்ந்த இவருக்கும், ஊராட்சி செயலாளர் வேல்முருகனுக் கும் சமூதாய ரீதியாக பிரச்சினையால், ஊராட்சி மன்றத் தலைவர் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்ததாக கூறப் படுகிறது. மேலும் அவரை, தனது தலைவர் பதவிக்கான பணியை மேற்கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டுள் ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 9-ம் தேதி, ஊராட்சி அலுவலகம் முன்பு தலைவர் ஏழுமலைதர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் அவர், தனக்கு எதிரான ஊராட்சிசெயலாளர் வேல்முருக னின் செயல்கள் குறித்து அப்போதைய ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆட்சியரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தேசியதூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலை மையில் ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆகியோர் கல்லரப்பாடி கிராமத்துக்கு நேற்று பிற்பகல் சென்றனர். ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை, அவரது குடும்பத் தினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறும்போது, “ஊராட்சி மன்றத் தலைவரை, ஜாதியின் பெயரை குறிப்பிட்டு ஊராட்சி செயலாளர் வேல்முருகன் அவமதித்த புகாரின் பேரில் இன்று (நேற்று) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்றபோது, தன்னை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து கையொப்பமிட வைத்ததாகவும், நாற்காலியை கொண்டு தன்னை தாக்கியதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அதன்பேரில் மக்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணையை விரைந்து முடிக்க ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டுக் கொண் டுள்ளேன். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட் டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். கல்லரப்பாடி விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago