நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவிற்கு கவச உடை அணிந்து சென்ற ஆட்சியர் ஸ்ரேயா சிங், நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத் துத்துறை அலுவலர் களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், கரோனா சிகிச்சை, காய்ச்சல் முகாம், பரிசோதனைப் பணிகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆட்சியர் பேசும்போது, நாமக்கல் மாவட்டம் முழுமையாக நோய்த்தொற்றுகட்டுப் படுத்தப் பட்ட மாவட்டமாக ஓரிரு வாரங்களில் உருவாகும். அதற்கான பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையிலேயே பொது மக்கள் தங்களது தந்தை, தாய் அல்லது மகன், மகள் போன்ற உறவினர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். அப்போதுதான் விரைவில் அவர்கள் குண மடைவார்கள், என்றார்.
தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவிற்கு கவச உடையணிந்து சென்ற ஆட்சியர், நோயாளிகளிடம் சிகிச்சை முறை, மருத்துவ உதவிகள், உணவு ஆகியவை முறையாகக் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago