நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு கடனுதவி : தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவ சாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனையில் ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவரை சந்தித்து நெல் சாகு படிக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடனுதவி வழங்க வேண்டும் என உழவர் பேரவையினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து உழவர் பேரவைமாவட்டத் தலைவர் புருஷோத்தமன் அளித்துள்ள மனுவில், “தமிழகத்திலேயே நெல் உற்பத்தியில், திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், சொர்ணவாரி (குறுவை) பட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 2 லட்சம் ஏக்கரில் மணிலா சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கிசான் கிரெடிட் கார்டு வழியாக பயிர்க்கடன் கொடுக்குமாறு வலியுறுத்து கிறோம்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் 2021-22-ம் ஆண்டில் ரூ.5,800 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக ஆட்சியர் வெளியிட்டுள்ள கடன் திட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலமாக தாமதமின்றி கடன் வழங்க ஆவண செய்ய வேண்டு கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் ஆட்சியரிடம் கூறும்போது, “கூட்டுறவு கடன் சங்கங்களில் நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே விவசாயக்கடன் வழங்கப்படுகிறது. இதில், சிறு-குறு விவசாயிகள் பெரிதும் பாதிக் கப்படுகின்றனர். எனவே, தகுதி உள்ள விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்