விழுப்புரம் மின்வாரிய பகிர்மான வட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளருக்கு மின்வாரிய அனைத்து பணியாளர்-பொறியாளர் சங்கம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.அம்மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரம் மின்வாரிய பகிர்மான வட்டத்தின் சிவில் பிரிவிலும், கட்டுமானப் பணிகளிலும், டெண்டர் கோருவதிலும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக எங்கள் சங்கம் சார்பில்கடந்த 21.2.2020-ல் தலைவர்,விழிப்புப் பணித் துறையிடம் நேரடியாக புகார் மனு அளித்திருந்தோம். அதன்படி விழிப்புப் பணித் துறையினர் கடந்த 6.3.2020-ல் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு, அந்த கமிட்டி ரூ. 5 லட்சம் இழப்பீடு நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது. மீண்டும் இரண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ரூ. 20 லட்சத்துக்கும் மேலாக இழப்பீடு நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்ததாக தெரியவருகிறது.

இரண்டு கமிட்டிகளும் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்