தி.மலை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக ஜமாபந்தி ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடு களுடன் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
இதனால், தி.மலை மாவட் டத்தில் நடப்பாண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு ரத்து செய்யப்படுகிறது. எனவே, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களுடன் பொதுமக்கள் நேரில் வர வேண்டாம். இணைய தளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக ஜுலை 31-ம் தேதி வரை மனுக்களை பதிவேற்றம் செய்யலாம்.
பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு தகவல் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago