அரசு கார் மீது கல் வீசிய 4 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான கார் நின்றிருந்தது. அப்போது அப்பகுதியில் நின்ற கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (25), முருகன் (28), அன்பு முருகன் (21), முனியசாமி (32) ஆகியோர் மதுபோதையில் கார் மீது கல்வீசித் தாக்கினர். இதுகுறித்து கார் ஓட்டுநர் சண் முகநாதன் புகார் செய்ததன் அடிப்படையில் கீழத்தூவல் போலீஸார் காளிதாஸ் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்