தேனி மாவட்ட ஆட்சியராக க.வீ. முரளிதரன் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி ஈரோடு ஆட்சியராக மாற்றப்பட்டார். இவருக்குப்பதிலாக வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறையின் இயக்குநர் க.வீ.முரளிதரன் தேனி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

நேற்று மாலை இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2003-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரசு திட்டங்கள் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைக்காக எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்பு பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்