வீட்டு உபயோகப் பொருட்களை - தபால்துறை மூலம் அனுப்ப வசதி :

By செய்திப்பிரிவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டு உபயோகப் பொருட்களை தபால்துறையின் லாஜிஸ்டிக் சர்வீஸ் மூலம் குறைந்த செலவில் அனுப்பி வைக்கலாம், என நாமக்கல் கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் பா.முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு காலத்திலும் மக்களின் நலனுக்காக தபால்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாஸ்க், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்கள் மூலமாக இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கலாம். இந்திய அஞ்சல் துறையில் உள்ள ஸ்பீட் போஸ்ட் மற்றும் பதிவு பார்சல் ஆகிய சேவை மூலம் பொருட்களை அனுப்பலாம்.

பள்ளிகள் தங்களுடைய மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை ஸ்பீடு போஸ்ட் மற்றும் பதிவு பார்சல் வழியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் குறைந்த செலவில் அனுப்பலாம். மேலும், வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்கள் சென்னை போன்ற அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வீட்டு உபயோகப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிகக் குறைந்த செலவில் அனுப்ப இந்திய அஞ்சல் துறையின் லாஜிஸ்டிக் போஸ்ட் சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்