திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற இலக்கை எட்டப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப்நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக இருந்த பா.முருகேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராக பா.முருகேஷ் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் பா.முருகேஷ் கூறும் போது, ‘‘தி.மலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற் கொண்டதால் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. என்னுடைய முதல் பணி கரோனா தொற்று தடுப்பு பணிகள் முழுமையாக கட்டுப்படுத்தி ‘பூஜ்ஜியம் தொற்று’ என்ற இலக்கை அடைவதாகும். மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி தொற்று பாதிப்பு 252-ஆக இருந்துள்ளது.
தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்கு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள், சுகாதாரம், ஆன்மிகத்தலமான தி.மலை மேம்படுத்தப்படும். அரசின் வழிகாட்டுதல் படியும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுவேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago