தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி தொற்று அதிகம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 11 மாவட்டங் களைச் சேர்ந்த மது அருந்துவோர் மதுபானங்களை வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று வந்தால் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தொட்டியம், முசிறி, துறையூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மதுபான பாட்டில்களை வாங்கி வருவதாக புகார் எழுந்தது.
இதை தடுக்க நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையான வடுகப்பட்டி, ஆண்டாபுரம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago