கூட்டுறவுத்துறையின் மூலம் உறுப் பினர் அல்லாத விவசாயிகளையும் புதிய உறுப்பினர்களாகச் சேர்த்து விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க் கடன் வழங்கப்படவுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னி வாடி மற்றும் புதுக்கோட்டை கிராமத்தில் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்துப் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத் தம் உள்ள 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் இரண்டாம் தவணையாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.129.81 கோடி கரோனா நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
கூட்டுறவுத் துறையின் மூல மாக விவசாயிகள் அனை வருக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. உறுப்பினர் அல்லாத விவசாயிகளைப் புதிய உறுப்பி னர்களாகச் சேர்த்து பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக் கூடிய அரிசி, சீனி, கோதுமை உட்பட அனைத்துப் பொருட்களும் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணை 99.9 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன பொதுமக்களுக்கும் அந்தத் தொகை வழங்கப்படும். அதே போல் இரண்டாம் கட்ட தவணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராசு தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், மேலாண்மை இயக் குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago