மதுரையில் ஒரே நேரத்தில் அடுத் தடுத்த இரு வைகை ஆற்று தரைப் பாலங்கள் கட்டுமானப் பணி நடப்பதால் வடகரை மற்றும் தென்கரைப் பகுதி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குருவிக்காரன்சாலை தரைப்பாலம் இடிக்கப்பட்டு ரூ.23.17 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் இவ்வழியாக சென்ற வாகனங்கள் அண்ணா நகர் மேம்பாலம் அல்லது கோரிப்பாளையம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலம் கட்டும் பணியே முடியாத நிலையில் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தை இடித்து விட்டு, அங்கு ரூ.23 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்கி உள்ளனர். அதற்காக பழைய தரைப்பாலத்தை இடிக்கும் பணி நடக்கிறது. இதனால் இப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழியாகச் செல்வோரும் கோரிப்பாளையத்தை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
குருவிக்காரன் சாலை பாலப் பணி முடிவடைவதற்குள், திட்ட மிடல் இன்றி ஓபுளா படித்துறை பாலத்தையும் இடிக்கின்றனர். ஒரே நேரத்தில் இரு தரைப்பாலங்களும் இன்றி ஆற்றின் வடகரை-தென்கரை இடையே மக்கள் எளிதாக சென்றுவர முடியாத தோடு, நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
நெல்பேட்டை, முனிச்சாலை, இஸ்மாயில்புரம், ஆழ்வார்புரம், மதிச்சியம் பகுதி மக்கள் இதனால் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். முழுமையாக ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும் போது கோரிப் பாளையம் பகுதியில் பல மடங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். எனவே ஏற்கெனவே கட்டுமானப் பணி நடக்கும் குரு விக்காரன் பாலப் பணியை மாந கராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago