ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் ரூ.5.81 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை :

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5.81 கோடிக்கு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கு வந்தது. புதிய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் விற்பனை நேற்று முன்தினம் நடை பெற்றது. ஒரு மாதத்துக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

காவல் துறையினர் பாதுகாப்பு

ஒரு சில கடைகளில் மது பாட்டில் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடை திறக் கப்பட்ட பிறகே மதுபாட்டில்கள் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் கூட்டம் அதிக மாக இருக்கும் என்பதால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 116 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, முதல் நாளான நேற்று முன்தினம் ரூ.3.41 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக் கோணம் மண்டலத்தில் மொத்தம் 88 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, முதல் நாளில் ரூ.2.41 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ஒரே நாளில் ரூ.5.81 கோடிக்கு மதுபாட்டில்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்