முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு புதுப்பிக்க வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்கள், தங்களது வேலைவாய்ப்பை புதுப்பிக்க பதிவு அட்டையுடன் வரும் 28-08-2021-க்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்