புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் தனியார் நிறுவனத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட தூய் மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு, கரோனா ஊரடங்கு சமயத்தில் பணியா ளர்களுக்கு போதுமான முகக் கவசம், கையுறைகள், சானி டைசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண் டும். பணியாளர்கள் வந்து செல்வதற்கு ஏற்ப வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு அறிவித்த ஊக்கத் தொகை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்தினரிடம் வலியுறுத்தி பணியாளர்கள் நேற்று மருத்துவ மனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் போலீ ஸார் சமாதானம் செய்து போராட் டத்தை கைவிடச் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago