தமிழக முதல்வருக்கு 5,000 இ-தந்தி அனுப்பிய வணிகர்கள் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அனைத்து கடைகளை பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கக் கோரி வேலூர் அனைத்து வணிகர்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் இ-தந்தி அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளை பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்க வேண்டும் என வேலூர் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு இ-தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் இ-தந்திகளை வணிகர்கள் நேற்று அனுப்பி வைத்தனர். இதில், வேலூர் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு, மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் குமார், மாவட்டச் செயலாளர் ஏ.வி.எம்.குமார், பொருளாளர் அருண்பிரசாத், நகரச் செயலாளர் பாபு அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்