திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தின் முன்பாக பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த ஊசிக் கல்மேடு அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா (55). அதே பகுதியில் வசந்தாவின் தங்கை அமுதா என்பவர் சுமார் ஒன்றரை சென்ட் இடத்தில் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அமுதா உயிரிழந்த நிலையில் அந்த வீட்டை அவரது மகள் ஈஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த கஜேந் திரன் என்பவருக்கு விற்றுள்ளார்.
இதற்கிடையில், தனது தங்கையின் வீடு தனக்குத்தான் சொந்தம் என்று கூறி அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் கஜேந்திரன் வசந்தாவை வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டுள்ளார்.
இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் வசந்தா கடந்த மாதம் 26-ம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால், வீட்டுக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் எதுவும் இல்லாத நிலையில் புகாரை விசாரிக்க முடியாது எனக் கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்துள் ளனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக வசந்தா நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தியதுடன் தண்ணீரை ஊற்றினார். தனது தங்கையின் வீட்டை மீட்டுக் கொடுக்க வலியுறுத்திய வசந்தா வின் கோரிக்கை குறித்து முறைப் படி விசாரிக்கப்படும் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago