மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் செருவலிங்கம்(60), விவசாயி. இவருக்கு மே 15-ல் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கண் வலி இருந்ததால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்தனர். அப்போது கரோனா இருப்பது உறுதியானது. அவருக்கு கருப்புப் பூஞ்சையும் இருந்துள்ளது. 9 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவரை கருப்பு பூஞ்சை தடுப்புக் கான ஆம்போடெரிசின்-பி மருந்து இல்லையெனக் கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் தடுப்பு மருந்து இல்லை என்றனர். இதையடுத்து கடன் வாங்கி தனியார் மருத்துவமனையில் ரூ.2.5 லட்்சம் வரை செலவிட்டும் பலனில்லை. தற்போது வீட்டில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதுகுறித்து சிவ கங்கை அரசு மருத்துவமனை டீன் ரேவதி கூறுகையில், ‘‘கருப்புப் பூஞ்சைக்கான தடுப்பு மருந்து வந்துவிட்டது. சிகிச்சைக்காக அவர் வரலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago