புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் - மனநலம் குன்றிய ஆதரவற்ற 15 பேர் குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டம் வேப்பங்குடி அருகே காயாம்பட்டி ஊராட்சி கல்லுப்பள்ளத்தில் 27 வயதான ஆதரவற்ற ஆண் ஒருவர் மனநலம் பாதிக் கப்பட்ட நிலையில் சுற்றித் திரிவதாக ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையம் மூலம் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற் காக காவல், சுகாதாரம், வருவாய்த் துறையினரை உள்ளடக்கிய மீட்புக்குழு செயல்பட்டு வருகிறது. ஆலங்குடி வட்டாட்சியர் அளித்த தகவலின்பேரில், கல்லுப்பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர், உடல் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய பரிசோ தனைகள் முடிக்கப்பட்ட பிறகு, மாவட்ட மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையத்துக்கு மாற்றப்படுவார்.

இம்மையத்தில் தற்போது 35 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஓராண்டில் மீட்கப்பட்டவர்களில் 15 பேர் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட் டுள்ளனர்.

இத்தகை செயலில் ஈடுபட்ட, மாவட்ட மனநல திட்டத்தினர் மற்றும் மீட்புக் குழுவினரின் பங்கு அளப்பரியது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்