கரூர் மாவட்டத்தில் 14 மையங் களில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அதிகாலை 3 மணி முதலே பெண்கள், ஆண்கள் வரிசையில் காத்திருந்தனர். பள்ளிக்கு வெளியே ஏராளமானோர் திரண்ட நிலையில், பாதுகாப்புக்கு வந்த போலீஸார், பள்ளிக்குள் 600 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தாந்தோணி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிந் தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம். க.பரமத்தி ஒன்றி யத்தில் விஸ்வநாதபுரி ஆரம்ப சுகாதார நிலையம், கூடலூர் மற்றும் காட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள். குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நச்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளி. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டி திருமண மண்டபம், குப்பாச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. கடவூர் ஒன்றியத்தில் பாலவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என 14 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 4,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago