திருச்சி: திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக்காரர்கள் சங்கத் தலைவர் நிக்சன் சகாயராஜ் உள்ளிட்டோர் நேற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
அரசு அறிவித்த தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் ஸ்டுடியோ, கலர்லேப் தொழில் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து கொடுக்கும் தொழில் நடத்தி வரும் போட்டோ, வீடியோ கிராபர்கள் ஏராளமானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, போட்டோ, வீடியோ கிராபர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக திருச்சி மாநகரம், துறையூர், மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கலர் லேப், ஸ்டூடியோ தொடர்பான நிறுவனங்களை திறப்பதற்கும், வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுவதற்கும் உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago