திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மேலும் 16,800 தடுப்பூசிகள் வந்தன. பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால், தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் தடுப்பூசிகள் வந்ததால் நேற்று முன்தினம் முதல் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு 7,800 கோவிஷீல்டு, 1,000 கோவாக்சின் என, மொத்தம் 8,800 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. தடுப்பூசி மையங்களில் ஏராளமான மக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதேபோல், தென்காசி மாவட்டத் துக்கு 5,900 கோவிஷீல்டு, 500 கோவாக்சின் தடுப்பூசிகள் என, மொத்தம் 6,400 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. இதில், 6,200 டோஸ் தடுப்பூசிகள் ஒரே நாளில் காலியாகின.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேலும் 6,500 கோவிஷீல்டு, 3,000 கோவாக்சின் என, மொத்தம் 9,500 தடுப்பூசிகள், தென்காசி மாவட்டத்துக்கு 5,000 கோவிஷீல்டு, 2,300 கோவாக்சின் என, மொத்தம் 7,300 தடுப்பூசிகள் வந்தன. தென்காசி மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் வந்து சேருவதில் தாமதம் ஆனது. பல மையங்களில் மதியம் 12 மணிக்கு மேல் தடுப்பூசிகள் வந்தன. இதனால், மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி மையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களிலும் ஏராளமான மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago