அனைத்து கடைகளையும் திறக்க வலியுறுத்தி - தமிழக முதல்வருக்கு இ-தந்தி அனுப்பும் போராட்டம் : வேலூர் வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக் கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கக்கோரி தமிழக முதல் வருக்கு 5,000 இ-தந்தி அனுப்பும் போராட்டத்தில் வேலூர் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில், தொற்று குறைந்து வரும் 27 மாவட் டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஜவுளி, நகை, அடகுக்கடைகள், மார்க்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு, குறு தொழில்கள் ஆகியவை இயங்குவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், வேலூர் சண்முகனடியார் சங்கத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் மாவட்டத் தலைவர் ஞான வேலு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாலு, வி.எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தொடர் ஊரடங்கால் ஜவுளி, நகை, அடகுக்கடைகள், அச்சகங்கள், சூப்பர் மார்க் கெட்டுகள் போன்றவை நலிவடைந் துள்ளன. தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஜவுளி, நகை, அடகுக் கடைகள், மார்க்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், சிறு, குறு தொழில்கள் ஆகியவை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதி அளிக்க, நேரக் கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதி வழங்குவதால் வணிகம், தொழில் துறை, தொழிலாளர் நலம், பொருளாதார மேம்பாடு, நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும்.

நீண்டகால கோரிக்கையை அரசு விரைவாக பரிசீலனை செய்ய வலியுறுத்தி வேலூரில் இருந்து திங்கள்கிழமை (இன்று) தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் இ-தந்தி அனுப்பிட முடிவு செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்