திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்குப் பின் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. மக்கள் கூட்டம் பெருகிய அளவுக்கு தடுப்பூசி இல்லாததால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும்பணி நிறுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் இதுவரை 1,54,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் 7,800 கோவிஷீல்டு மற்றும் 1,000 கோவாக்சின் என, மொத்தம் 8,800 கரோனா தடுப்பூசிகள் திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த தடுப்பூசிகள் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் வரதராஜன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் உள்ள 84 தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இதையடுத்து நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
ஒரு வாரத்துக்குப்பின் தடுப்பூசி போடப்பட்டதால், தடுப்பூசி மையங்களில் குவிந்த மக்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால் செவிலியர்கள் சிரமப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
நிழலுக்கான பந்தல் மற்றும் தண்ணீர் வசதிகளை அப்துல்வகாப் எம்எல்ஏ செய்து கொடுத்தார். மாவட்டத்தில் ஒவ்வொரு மையத்துக்கும் தலா 100 தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தென்காசி
கன்னியாகுமரி
தூத்துக்குடி
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago