தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆரோக்சியராசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், “2020-21ம் கல்வியாண்டு தொடங்கி உள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாணவர்கள் சுழற்சி முறையில் வாரத்துக்கு 2 நாட்கள் பள்ளிக்கு வருவது போன்ற சூழலை உருவாக்கி, பள்ளிகளை திறக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதல் பருவ பாட புத்தகங்கள் நேரடியாக பள்ளிகளுக்கே சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக பள்ளிகளுக்கே வந்து சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்