ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,200 விலையில் டிஏபி உரம் விற்பனை :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,200 விலைக்கே டிஏபி உரத்தை விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரத்துக்கான மூலப்பொருட்களான அம்மோனியம் பாஸ்பாரிக் அமிலம் விலை சர்வதேச அளவில் ஏற்கெனவே 140 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை டிஏபி உரத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.500 மானியமாக வழங்கப்பட்டது. தற் போது, 2 ஆயிரத்து 400-ஆக விலை உயர்ந்துள்ளதால் மானியம் ரூ.1,200 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விலை உயர்வு மிக அதிகம் என்றாலும் விவசாயிகள் டிஏபி உரத்தை பழைய விலையான ரூ.1,200-க்கே வாங்கலாம். இந்த கடன் சுமையை மத்திய அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. எனவே, ராணிப்பேட்டை மாவட்ட விவ சாயிகள், தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் டிஏபி உரத்தை பழைய விலைக்கே வாங்கி பயன்படுத்தலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்