ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் - ரூ.4,803 கோடி கடன் வழங்க இலக்கு : திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் வங்கி யாளர்கள் சார்பில் ரூ.4,803 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கை ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், முன்னோடி வங்கி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 2021-22-ம் ஆண்டுக் கான கடன் திட்ட அறிக்கையின்படி ரூ.4,803.92 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் கிருஷ்ணராஜ் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வங்கி யாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இந்த மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்கிட வங்கியாளர்கள் ஆதரவளிக்க வேண்டும். மாவட் டத்தில் விவசாயக் கடனாக ரூ.2,875.60 கோடியும், சிறு மற்றும் குறு தொழில் கடனாக ரூ.702.81 கோடியாகவும், இதர முன்னுரிமை கடனாக ரூ.1,225.51 கோடியாக என மொத்தம் ரூ.4,803.92 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட கடன் தொகையை குறித்த காலத்துக்குள் வழங்கிட வேண்டும்’’ என்றார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலயம்மா ஆப்ரகாம், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர்கள் ராம கிருஷ்ண குமார், ராமராவ், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர்கள் சுப்புலெட்சுமி, அபிட் அஹ்மத், கனரா வங்கி மேலாளர் மிருத்யுன்ஜெய பெகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்