தமிழ்நாடு செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.12.65 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒப்படைத்தார்.
தமிழ்நாடு செஞ்சிலுவை சங்கம் சார்பில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள், தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 வென்டிலேட்டர்கள் மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பில் 5 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டி இயந் திரங்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க தி.மலை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் இந்திரராஜன் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபுவிடம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் ஒப்படைத்தார். மேலும் அவர், கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அறிமுகப்படுத்தினார். அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago