விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விருது களை பெற வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசத்துக்கு நற் பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள், திருட்டு, விபத்துகள், நீரில் மூழ்கிய வர்கள், தீவிரவாத சதி செயல்களில் இருந்து மக்களை காப்பாற்றியவர்கள், ஆபத்து காலத்தில் உதவியவர்களுக்கு இந்திய அரசு, விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள், அர்ஜுனா விருதுகள், துரோனாச்சாரியா விருதுகள், தயான்சந்து விருதுகள், ராஷ்டீரிய கேல் புரஸ்கார் விருதுகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருது களுக்கான விண்ணப்பங் களை தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்துக்கு அனுப்பி வைக்க வரும் 16-ம் தேதியும் மற்றும் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க வரும் 21-ம் தேதியும் கடைசி நாளாகும்.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை, www.sdat.tn.gov.in மற்றும் www.yas.nic.in தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தின் 04175-233169 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago