கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரியில் - பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங். ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் 30 பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கரோனா காலத்திலும் புதுச்சேரியில் கடந்த 40 நாட்களில் 21 முறை விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக புதுவைமாநில காங்கிரஸ் சார்பில் 30 பெட்ரோல் பங்குகள் முன்பு காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அண்ணாசாலையில் உள்ள பெட்ரோல் பங்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சிக் கொடியுடன் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மறைமலைஅடிகள் சாலை ஆட்டுப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸார் இதில் பங்கேற்றனர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

விருத்தாசலம்

கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவரும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் விருத்தாசலம் பாலக்கரை அருகே உள்ள பெட்ரோல்பங்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே காங். நகரத் தலைவர் ஜெயகணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழுப்புரம் நகரில் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 5 இடங்களிலும் மத்திய மாவட்டத் தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திண்டிவனத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வடக்கு மாவட்டத் தலைவர் ர்மேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்