சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா, நுரையீரல் பாதிக் கப்பட்ட நோயாளிகளைக் காண உறவினர்கள் குவிந்து வருவதால் மாடிப் படிக்கட்டுகளை மருத்துவ மனை நிர்வாகம் அடைத்தது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரை யீரல் பாதிப்பால் 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். சிவகங்கை மட்டுமின்றி ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரும் சிகிச்சை பெறுகின்றனர். நோயா ளிகளைக் காண தினமும் ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து வந்தனர். மருத்துவமனை நிர் வாகம் பலமுறை எச்சரித்தும் உறவினர்களின் வருகையைத் தடுக்க முடியவில்லை.
சமீபகாலமாக நோயாளிகளை காணவந்த உறவினர்கள் பலருக் கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முதல் மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள நோயாளிகளைக் காண வருவோரை தடுக்க காவலாளிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மேல் தளத்துக்கு செல்ல முடி யாதபடி மாடிப் படிகளில் தடுப் புகளை வைத்து அடைத்துள்ள னர். மேலும் நோயாளிக்கு உத வியாக அடையாள அட்டையு டன் ஒரே ஒரு பார்வையாளர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார். அவரும் வார்டில் தங்கும் போது கண்டிப்பாக கவச உடை அணிந்திருக்க வேண்டும். அவர் கள் சென்று வருவதற்காக ஒரே ஒரு சாய்தள வழி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் வார்டுகளுக்குச் செல்ல முடியாத நோயாளிகளின் உறவினர்கள் அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago