பெரம்பலூர் மாவட்டத்தில் - மூன்றாம் பாலினத்தவர் 51 பேருக்கு கரோனா நிவாரண உதவித்தொகை : ஆட்சியர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலி னத்தவருக்கு கரோனா உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில், கரோனா நிவார ணத் தொகையை வழங்கிய ஆட்சியர்  வெங்கட பிரியா கூறியது:

குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ள மூன்றாம் பாலினத் தவருக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4,000 வழங்கவும், அதில் முதல் தவணையாக ரூ.2,000-ஐ உடனே வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 51 பேர் கண்டறியப்பட்டு, தலா ரூ.2,000 வீதம் ரூ.1.02 லட்சம் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந் திரன், துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்