மருந்தகங்களில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தனியார் மருந்தகங்கள் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சமீரன் பேசியதாவது:

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் விநியோகிக்க கூடாது. காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளின் தகவல்களை சுகாதாரத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். மருந்து வாங்க வரும் நோயாளிகளிடம் காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென் பட்டால் ஆக்சிஜன் அளவை அறிந்துகொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்ஸியோ கருவியை இலவசமாக வைத்து ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்பான மருந்து களை நோயாளிகளிடம் வழங்கும் தகவல்களை சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தினந்தோறும் பதிவிட வேண்டும். மருந்தகங்களில் மருத்துவர்களின் பெயர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது. யாரேனும் மருந்தகங்களில் மருத்துவர்களின் பெயரை குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுவது தெரியவந்தால் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருந்தகங்கள் கரோனா போன்ற பெருந் தொற்றை கட்டுப்படுத்துவ தற்கு சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்து க்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

பின்னர், ஐசிஐசிஐ வங்கி சார்பில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆட்சியரிடம் மண்டல மேலாளர் கள் இம்தியாஸ் முகமது, தர் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அருணா, மருந்து ஆய்வாளர் ராமச்சந்திரன், மருந்தகங்களின் சங்க தலைவர் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்