வேலூர் மாவட்டத்தில் - ட்ரோன் கேமரா உதவியுடன் சாராய வேட்டை தீவிரம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கேமரா பயன்படுத்தி சாராயம் காய்ச்சப்படும் இடங்களை கண்டறிந்து அழிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சாராயம், வெளிமாநில மதுபாட்டில் கடத்தலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. சாராய ஒழிப்புப் பணிக்காக ‘ஆபரேஷன் விண்ட்’ சோதனை தொடங்கியுள்ளது. இதற்காக, கலால் பிரிவு மற்றும் ஆயுதப் படை காவலர்கள் அடங் கிய குழுவினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப் பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் சோதனையில் ஒரு பகுதியாக நேற்று பேரணாம் பட்டு அடுத்த சாத்கர் மலைப் பகுதியில் காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட் டனர். இதில், ட்ரோன் கேமரா மூலம் சாராயம் காய்ச்சப்படும் இடங் களை கண்டறிந்து அழிக்க முடிவு செய்தனர். மலையின் உயரமான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிகளில் ட்ரோனை பறக்கவிட்டு சாராய வேட்டையில் ஈடுபட் டனர்.

ட்ரோன் பறந்தபோது மறை வான இடத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட கும்பல் சிதறி ஓடுவதைகாவல் துறையினர் கண்டறிந்தனர். அந்த இடத்துக்குச் சென்றபோது சுமார் 1,400 லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்து அழித்தனர். வரும் நாட்களில் ட்ரோன்கள் உதவியுடன் சாராயம் காய்ச்சப்படும் இடங் களை கண்டறிந்து அழிக்க நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்