தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை :

By செய்திப்பிரிவு

விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலையை மாணிக்கம் தாகூர் எம்.பி. நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

கரோனா காலத்தில் தீப்பெட்டித் தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்தேன். 50 சதவீத பணியாளர்களுடன் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்களை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல் பட்டாசு ஆலைகளைத் திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீண்டும் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்.

மாநில அரசுகள் வேண்டும் என்றால் நீட் தேர்வு நடத்தப்படும். வேண்டாம் என்றால் நடத்தப்படாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலை. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அசோகன் எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்