கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய ஆணையர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பும் இயக்கம் நேற்று நடை பெற்றது.
அதன்படி, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமாரிடம் மனு அளித்தனர்.
மணிகண்டம் ஒன்றிய அலுவல கத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், ஒன்றியச் செயலாளர் சங்கர் ஆகியோரும், திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் மனு அளித்தனர். இவைதவிர, இ-மெயில் மூலமாகவும் பிரதமருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், விரைவு அஞ்சல் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணனிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago