இ-பதிவு இல்லாமல் ஆட்டோக் களை இயக்கவும் இ-பதிவு இல்லாத பயணிகளை ஏற்றவும் கூடாது என ஆட்டோ ஓட்டுநர் களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக் கள், கார்கள் என வரிசையாக அணிவகுத்து செல்கின்றன.
வேலூர் அண்ணாசாலை, காட்பாடி சாலை, வேலூர் - ஆற்காடு சாலை, வேலூர் - ஆரணி சாலையில் வாகன போக்குவரத்து அதிக மாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கை யாக கூடுதல் எஸ்பி ஆல்பர்ட் ஜான், மக்கான் சிக்னல், காமராஜர் சிலை சந்திப்பு, அண்ணாசாலையில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆரணி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி வழியாக சுற்றி செல்வதை தவிர்க்க, திருமலை- திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே அடைக்கப்பட்டி ருந்த பேரி கார்டுகள் அகற்றப் பட்டன. ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் இ-பதிவு வைத்துள்ளார்களா? என்பதை ஓட்டுநர்கள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அதேபோல, ஆட்டோ ஓட்டுநர் களும் வேலூர் மாநகர் பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க இ-பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இ-பதிவு இல்லாத பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago