பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக எஸ்.மணி, அரியலூர் மாவட்ட எஸ்.பியாக கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் எஸ்.பியாக இருந்த நிஷா பார்த்திபன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பெரம்பலூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட எஸ்.மணி, பெரம்பலூர் எஸ்பி அலு வலகத்தில் நேற்று பொறுப்பேற் றுக்கொண்டார்.
பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் 63741 11389 என்ற எனது வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள், போக்குவரத்து விதிமீறல் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. காவல் துறையின் நடவ டிக்கைக்கு உதவும் வகையில், கண்காணிப்பு கேமராக்களை நன் கொடையாக பொதுமக்கள், நிறு வனங்கள் அளிக்கலாம் என்றார்.
அரியலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த வீ.பாஸ்கரன் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பியாக பெரோஸ்கான் அப்துல்லா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று பெரோஸ் கான் அப்துல்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், அவர் கூறியபோது, “அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் அதிகம் இருப்பதால், வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். மக்கள் சுதந்திரமாகவும், அமைதி யாகவும் வாழ்வதற்கான வழி முறைகள் ஏற்படுத்தப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago