கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் அணை கள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன.
கடந்த இரு நாட்களாக மாவட்டத் தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அடையாமடையில் 62 மிமீ மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 38 மிமீ, கன்னிமாரில் 31, பேச்சிப்பாறையில் 32, சிவலோகத்தில் 37, பாலமோரில் 22, முக்கடல் அணையில் 16, மாம்பழத்துறையாறில் 15, கோழிப்போர்விளை மற்றும் ஆனைகிடங்கில் தலா 13, சுருள கோடு மற்றும் பூதப்பாண்டியில் தலா 11 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.58 அடியாக உள்ளது. 875 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. பெருஞ் சாணி அணைக்கு 631 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 71.46 அடியாக உள்ளது. 404 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றில் 16.60 அடி, சிற்றாறு இரண்டில் 16.70 அடி, பொய்கையில் 26.60அடி, மாம்பழத்துறையாறில் 54.12 அடி, முக்கடல் அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது. பாலமோரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 17 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 11 மி.மீ., தென்காசியில் 4.6 மி.மீ., குண்டாறு அணையில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 1.80 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. குண்டாறு அணை மட்டும் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 88 அடியாகவும் இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago